தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாய பல்கலையில் கண்காட்சி புதிய ரக பயிர்கள் அறிமுகம்

விவசாய பல்கலையில் கண்காட்சி புதிய ரக பயிர்கள் அறிமுகம்

விவசாய பல்கலையில் கண்காட்சி புதிய ரக பயிர்கள் அறிமுகம்


UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM

ADDED : ஜூலை 17, 2021 09:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM ADDED : ஜூலை 17, 2021 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் விவசாய திட்டங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் கண்காட்சி நவம்பரில் நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், வேளாண் துறையில் உள்ள அனைத்து திட்டங்கள், காப்பீடு முறைகள், புதிய ரக நெல் மற்றும் பயிர் வகைகள், தானியம், தொழில்நுட்ப பயன்பாடு, தொடர்பாக, &'கிருஷி மேளா&' என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்படுகிறது.பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு கண்காட்சி நவ.,12ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
கொரோனா தடுப்பு வழிமுறையாக, விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் கண்காட்சியை ஆன்லைனில் மட்டுமே பார்வையிட முடியும்.பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றிதான் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கண்காட்சியில் 25 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.மூன்று அரங்குகளில் புதுரக விதைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. விவசாய துறையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் குறித்து, 17 அரங்குகள் அமைக்கப்படும். இதில், அறுவடை புதிய தொழில்நுட்பம் தொடர்பாக 8 அரங்குகள்; பயிர் பாதுகாப்பு தொடர்பாக 7 அரங்குகள்; மீதமுள்ளவற்றில் நீர்ப்பாசன முறை குறித்தும் விளக்கப்படுகிறது.
வேளாண் பொறியியல் துறையின் கீழ், அறிமுகப்படுத்தப்பட்ட சோலார் உலர் கலன் இயந்திரம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.
இது தவிர, இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி தயாரிப்பு, நிலக்கடலை உள்ளிட்ட சில கடலை வகைகள் பயிரிடுதல் தொடர்பான அரங்குகளும் இடம்பெறுகிறது.&'யூ டியூப், பேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர்&' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் கண்காட்சி அரங்குகளை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us