அரசு பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பு? ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு!
அரசு பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பு? ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு!
UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM
ADDED : ஜூலை 19, 2021 10:24 PM
சென்னை:
அரசு பள்ளி மாணவர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, பள்ளி கல்வி கமிஷனருக்கு அறிக்கை அனுப்பும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அனகாபுத்துார், அரசு மேல்நிலைப் பள்ளி, பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் முரளிதரன் தாக்கல் செய்த மனு:
&'அரசு பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் அளிக்கும் போது, மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது&' என, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை
அதற்கு முரணாக, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 100 ரூபாய், பள்ளி தலைமை ஆசிரியை வசூலிக்கிறார். விண்ணப்பம் வழங்கும் போது, மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து பணம் வசூலிப்பதற்கு, தலைமை ஆசிரியைக்கு தடை விதிக்க வேண்டும்; அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரி அறிக்கை
மனுவை விசாரித்தநீதிபதி டி.கிருஷ்ணகுமார், &'&'மாணவர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிக்கக் கூடாது. &'&'இதை கண்டிப்புடன் பின்பற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அனைத்து பள்ளிகளுக்கும்,பள்ளி கல்வி கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்&'&' என, உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மாவட்ட கல்வி அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில், &'தலைமை ஆசிரியை அளித்த விளக்கத்தில், பெற்றோர் - ஆசிரியர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், 6 - 10ம் வகுப்பு வரை 50 ரூபாய்.
&'மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக கூறியுள்ளார். அரசு கணக்கில் அதை செலுத்தி உள்ளார்&' என, கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை பின்பற்றாமல், கூடுதல் பணத்தை தலைமை ஆசிரியை வசூலித்துள்ளது தெரிய வருகிறது. தலைமை ஆசிரியையின் இந்த செயலை கடுமையாக கருத வேண்டும். அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும்.
விசாரணை தள்ளிவைப்பு
பள்ளி கல்வி கமிஷனர் பிறப்பித்த சுற்றறிக்கையை, அனைத்து அரசு பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும். கமிஷனர் பிறப்பித்த சுற்றறிக்கையின்படி, தங்கள் அதிகார வரம்புக்குள் வரும் அரசு பள்ளிகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அறிக்கையை, கமிஷனரிடம் அளிக்க வேண்டும்.
மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெற்று, நீதிமன்றத்தில் பள்ளி கல்வி கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 27க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
