தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திடக்கழிவு மேலாண்மையில் குவிந்துள்ள வாய்ப்புகள் குறித்த குழு விவாதம்

திடக்கழிவு மேலாண்மையில் குவிந்துள்ள வாய்ப்புகள் குறித்த குழு விவாதம்

திடக்கழிவு மேலாண்மையில் குவிந்துள்ள வாய்ப்புகள் குறித்த குழு விவாதம்


UPDATED : ஜூலை 23, 2021 12:00 AM

ADDED : ஜூலை 23, 2021 12:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2021 12:00 AM ADDED : ஜூலை 23, 2021 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திடக்கழிவுகள் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள் மற்றும் இத்துறையில் குவிந்துள்ள வாய்ப்புகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், ஜூலை 28ம் தேதி மாலை 4 மணிக்கு குழு விவாதத்தை நடத்துகிறது.
அதிகரித்து வரும் திடக்கழிவுகள் சார்ந்த சவால்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திறன்களை வழங்குவது மற்றும் இத்துறையில் தேவையான மனித வளத்தை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த குழு விவாதம் நடைபெற உள்ளது. 
இதில், அம்ரிதா கல்வி நிறுவன உதவி பேராசிரியர்கள் வி.எஸ். ராமச்சந்திரன் மற்றும் எஸ்.ராஜேந்திர குமார்,  &'நோ டம்பிங்&' மற்றும் &'அன்வஸ்ட்&' அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ சுரேஷ் பண்டாரி, மூத்த ஆலோசகர் ஸ்ரீ சிவா சுப்பராயுடு கஸ்தூரி, &'காமா’ கன்சல்டன்சி குழுமத்தின் தலைமை ஆலோசகர் மகந்தி ஜே. முத்துகுமாரசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார பிரிவில் வழங்கப்படும் ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமா படிப்பின் பாடத்திட்டம் குறித்தும், கழிவுகள் அதிகரித்து வருவதால் சமூகம் மற்றும் நிர்வாகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், திடக்கழிவு மேலாண்மையில் உள்ள தற்போதைய நிலை மற்றும் நிறைந்துள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடுகின்றனர். 
இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்க https://zcmp.in/QJQw என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். 
நிகழ்ச்சியை நேரடியாக காண: https://www.facebook.com/AmritaSchoolofEngineeringCoimbatore

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us