அரசு கலைக்கல்லுாரியில் வரும், 26ல் சேர்க்கை துவக்கம்
அரசு கலைக்கல்லுாரியில் வரும், 26ல் சேர்க்கை துவக்கம்
UPDATED : ஜூலை 23, 2021 12:00 AM
ADDED : ஜூலை 23, 2021 01:00 AM
வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், வரும், 26ம் தேதி முதல் &'ஆன்லைன்&' வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22ம் ஆண்டிற்கான, இளங்கலை மாணவர்கள் சேர்க்கை, வரும், 26ம் தேதி துவங்குகிறது. கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, ஒன்பது பாடப்பிரிவுகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். &'ஆன்லைன்&' வாயிலாக விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்.
கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &'2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு, 70922 64114 என்ற மொபைல்போன் எண்ணில், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பாடங்கள் தேர்வு குறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்,&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
