தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஐ.எஸ்.சி.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.ஐ.எஸ்.சி.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.ஐ.எஸ்.சி.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : ஜூலை 26, 2021 12:00 AM

ADDED : ஜூலை 26, 2021 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2021 12:00 AM ADDED : ஜூலை 26, 2021 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம்  வெளியிடப்பட்டன.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் கீழ் இந்த ஆண்டு நடக்க விருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த வகுப்பு மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு கொள்கை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இது குறித்து சி.ஐ.எஸ்.சி.இ.,யின் தலைமை நிர்வாகியும், பொதுச் செயலருமான ஜெர்ரி அராத்துான் கூறியதாவது: 

இந்த தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவியர் என இருதரப்பினரும் 99.98 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் 99.86 சதவீதமும், மாணவியர் 99.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகையில் பிழை இருக்கும்பட்சத்தில், அதை சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us