தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.சி., சிறப்பு ஒதுக்கீடு: அமல்படுத்த அரசாணை

எம்.பி.சி., சிறப்பு ஒதுக்கீடு: அமல்படுத்த அரசாணை

எம்.பி.சி., சிறப்பு ஒதுக்கீடு: அமல்படுத்த அரசாணை


UPDATED : ஜூலை 27, 2021 12:00 AM

ADDED : ஜூலை 27, 2021 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2021 12:00 AM ADDED : ஜூலை 27, 2021 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வன்னியர்களுக்கான சிறப்பு உள் ஒதுக்கீடுடன் கூடிய, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, புதிய சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசு ஆணையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இது குறித்து, தமிழக அரசு செய்திக்குறிப்பு:

அரசு பணி நியமனங்களிலும், கல்வி வேலைவாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு வழங்கப்பட்டுள்ள, 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு உள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, சிறப்பு ஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாடு சட்டம், 8 - 2021 இயற்றப்பட்டது.
&'அந்த சட்டத்தின் அடிப்படையில், அரசு பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச்சுழற்சி முறையை திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி, நல்ல முடிவு எடுக்கப்படும்&' என, முதல்வர் உறுதி அளித்திருந்தார் .
அதன்படி, சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசு பணியாளர் தேர்வுஆணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டை, பிப்., 26 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை, நேற்று முதல்வர் வெளியிட்டு உள்ளார். அது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல், தொழிற்கல்வி உள்ளிட்ட, அனைத்து கல்வி சேர்க்கைகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறை அடிப்படையிலேயே நடைமுறைப் படுத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us