அரசு கல்லுாரிகளில் அட்மிஷன் தரவரிசை பட்டியல் முறை அறிவிப்பு
அரசு கல்லுாரிகளில் அட்மிஷன் தரவரிசை பட்டியல் முறை அறிவிப்பு
UPDATED : ஜூலை 29, 2021 12:00 AM
ADDED : ஜூலை 29, 2021 10:48 AM
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, &'ஆன்லைன்&' வழியில் நடக்கிறது. தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், https://tngasa.in என்ற இணையதளம் வழியே, விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கும் முறை குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பி.ஏ., தமிழ் பாடத்தில் சேர விரும்புவோருக்கு, தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையிலும்; பி.ஏ., ஆங்கிலம் சேர விரும்புவோருக்கு, ஆங்கில மதிப்பெண் அடிப்படையிலும், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.
பி.ஏ., - பி.எஸ்சி., - பி.லிட்., - பி.காம்., - பி.பி.ஏ., -பி.சி.ஏ., - பி.எஸ்.டபிள்யூ போன்ற பட்டப் படிப்புகளுக்கு, தமிழ், ஆங்கிலம் அல்லாத மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும். இவ்வாறு கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
