தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குவிஸ் போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வெற்றி

குவிஸ் போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வெற்றி

குவிஸ் போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வெற்றி


UPDATED : நவ 18, 2009 12:00 AM

ADDED : நவ 18, 2009 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2009 12:00 AM ADDED : நவ 18, 2009 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘ஸ்பெக்ட்ரா 2009’ என்ற மாவட்ட அளவிலான ‘குவிஸ்’ போட்டி நடந்தது. புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.


எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க, கோவை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. தேர்வு செய்யப்பட்ட  பள்ளிகளின் சார்பில் மொத்தம் 98 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் ரங்கராஜன் போட்டிகளை நடத்தினார்.


ஆடியோ, விஷூவல் சுற்று, வினாச்சுற்று உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற ஆறு டீம்களை சேர்ந்த 12 மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை சேர்ந்த அஸ்வின், கோவிந்தராஜ்  ஆகிய இரு மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு 2,000 ரூபாய் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.


இரண்டாவது பரிசு பெற்ற ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதுலா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லோகேஷ் ஆகியோருக்கு 1,500 ரூபாய் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசு பெற்ற ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிரேயஸ், கரண் ராணா ஆகியோர் 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் சான்றிதழும் பெற்றனர். இதைத் தவிர போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


பள்ளியின் அறிவியல் துறை சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் இசைவாணி, சுதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் பள்ளியின் தாளாளர் அருணாசலம், முதல்வர் ஆனந்த், துணை முதல்வர் கீதா ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us