முதலாமாண்டு எம்.எட். டெக்னாலஜி படிப்பு: அரசு முக்கிய முடிவு
முதலாமாண்டு எம்.எட். டெக்னாலஜி படிப்பு: அரசு முக்கிய முடிவு
UPDATED : நவ 20, 2009 12:00 AM
ADDED : நவ 20, 2009 03:54 PM
அ நிறம் | அளவு
சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எட். டெக்னாலஜி (செமஸ்டர்) படிப்பை, பி.எட். படிப்புக்கு சமமாக கருத முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் முதலாவது ஆண்டு எம்.எட். டெக்னாலஜி படிப்பை பி.எட். பட்டத்துக்கு சமமாக கருத வேண்டும் என்று அப்பல்கலைக்கழக பதிவாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் கருத்து கேட்கப்பட்டது. பணியாளர் தேர்வாணையத்தின் கமிட்டிக் கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்புகளில் முதலாமாண்டு எம்.எட். டெக்னாலஜி படிப்பை பி.எட். படிப்புக்கு சமமாக கருத முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது. இதை அரசும் ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
