தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 விண்ணப்பம் தட்டுப்பாடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 விண்ணப்பம் தட்டுப்பாடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 விண்ணப்பம் தட்டுப்பாடு


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 05:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வு விண்ணப்பங்கள் கிடைக்காமல் இளைஞர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.


நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், பத்திரப்பதிவு சார் பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் வரும் ஏப்.11 ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 15 ம் தேதி வெளியானது.


தட்டுப்பாடு: விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்பம் தட்டுப்பாடு ஏற்பட்டு இளைஞர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நகராட்சி, பேரூராட்சி தபால் அலுவலகங்களுக்கு 500, மாநகராட்சியில் 700 முதல் ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தினமும் நூறு விண்ணப்பங்கள் விற்கின்றன. இதனால் சில நாட்களிலேயே தீர்ந்து இளைஞர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.


தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்வாணையம் தேர்வு அறிவிப்பதற்கு முன்பே விண்ணப்பம் அச்சடிப்பதில்லை. விண்ணப்பம், கவர்களை தனியாக அச்சடிப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. விண்ணப்பம் தீர்ந்த பின், ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வழங்கப்படுகிறது. தேவையை விட குறைவாகவே தருகின்றனர். அவையும் உடனே விற்று விடுவதால் தட்டுப்பாடு நிலவுகிறது” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us