இந்திய-அமெரிக்க கல்வி பரிமாற்றத்தை ஊக்குவிக்க திட்டம்
இந்திய-அமெரிக்க கல்வி பரிமாற்றத்தை ஊக்குவிக்க திட்டம்
UPDATED : நவ 25, 2009 12:00 AM
ADDED : நவ 25, 2009 12:56 PM
இத்திட்டத்திற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்படுகிறது. அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபர் ஒபாமா உடனான சந்திப்பிற்குப் பிறகு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் சமுதாயக் கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு கல்வி பகிர்மான ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். இருநாட்டு கல்வி பரிமாற்றத்தில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
எதிர்காலத்தில் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகளைச் சேர்ந்த இருநாட்டு மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் புல்பிரைட்-நேரு உதவித்தொகை திட்டத்திற்கான நிதி 45 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, இத்திட்டத்திற்கான உதவித்தொகை மதிப்பு 6.7 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, உலக நாடுகளின் உணவுத் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் இந்திய -அமெரிக்க ஆய்வாளர்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
