தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓவிய ஆசிரியருக்கு மாநில பதிவுமூப்பு விபரம்

ஓவிய ஆசிரியருக்கு மாநில பதிவுமூப்பு விபரம்

ஓவிய ஆசிரியருக்கு மாநில பதிவுமூப்பு விபரம்


UPDATED : நவ 26, 2009 12:00 AM

ADDED : நவ 26, 2009 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2009 12:00 AM ADDED : நவ 26, 2009 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஓவிய ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நியமனம் செய்வதற்காக மாநில அளவிலான பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


இளங்கலை பட்டப்படிப்புடன் ஓவியம், பெயின்டிங்கில் பகுதி மூன்று தேர்ச்சி, 1.7.2009 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும். 18.11.2009 வரை பதிவு செய்துள்ள முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அனைத்து வகுப்பு ஆண், பெண் இருபாலரும் தகுதியுள்ளவர்களே.


இத்தகுதியுள்ளவர்கள் பற்றிய பட்டியல் மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, குமரி, துõத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுதாரர்கள் பதிவுமூப்பை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us