தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வசதி குறைந்த பள்ளியை தத்தெடுக்க வலியுறுத்தல்

வசதி குறைந்த பள்ளியை தத்தெடுக்க வலியுறுத்தல்

வசதி குறைந்த பள்ளியை தத்தெடுக்க வலியுறுத்தல்


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ’நாளைய பள்ளி’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை ‘ஐடிஸ்கவரி எஜுகேஷன்’ எனும் சமூக நிறுவனம் சென்னயில் சமீபத்தில் நடத்தியது.


இந்நிகழ்ச்சியில் ’பள்ளி ஒன்றைத் தத்தெடுங்கள்’ என்னும் திட்டத்தையும் அறிவித்தது. இதன்படி, கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வசதியற்ற ஏதேனும் ஒரு பள்ளியைத் தத்தெடுக்கலாம். தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மிகச் சிறிய நகரங்கள் அளவிலும் சுமார் 200 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.


இத்திட்டம் குறித்து ஐடிஸ்கவரி எஜூகேஷன் மேலாண் இயக்குனர் திரு அஷீஷ் ராஜ்பால் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்னும் முயற்சியில் ‘பள்ளி ஒன்றைத் தத்தெடுங்கள்’ என்னும் திட்டம் உருவானது. தனிநபர்களோ அல்லது கார்பரேட் நிறுவனங்களோ இந்தத் திட்டத்தில் பங்கேற்று ஒரு வசதியில்லாத குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம். மூன்று ஆண்டுகள் குழந்தையின் கல்வி கற்கும் அளவுகளில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆற்றல் மிகுந்த, பரிசோதிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டமான ‘எக்ஸீட்’ தத்தெடுக்கப்பட்ட வருமானம் குறைந்த பள்ளிகளில் அறிமுகமாகும்’ என்றார்.


ஹார்வ்ர்ட் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் பிரபல உளவியல் நிபுணர் ஹோவார்ட் கார்ட்னர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசுகையில், ‘வளரும் நாடுகளில் கல்வி அறிவு, திறன், ஊக்கம் ஆகியவை மேம்படுவதன் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உதவ முடியும்’ என்றார்.


நிகழ்ச்சியில், ஐஐடி, கான்பூர் ஆளுநர் குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பேசுகையில், “மத்திய அரசு 11வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வித் துறைக்கு மட்டும் 2,87,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கடந்த 1951ம் ஆண்டை ஒப்பிடுகையில், கல்வித் துறையில் இந்தியா படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது” என்றார்.


சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி, பிரிடானியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வினிதா பாலி, என்.ஐ.ஐ.டி. தலைவர் ராஜேந்திர பவார் உள்ளிட்ட் கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு கார்பரேட், கல்வி மற்றும் அரசுத் துறைகளின் பொறுப்பு மற்றும் தொலைநோக்கு குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 300க்கும் அதிகமான பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us