UPDATED : நவ 30, 2009 12:00 AM
ADDED : நவ 30, 2009 12:21 PM
"நினைத்த இலக்குகளை அடைய ஆசைகளை பலி கொடுங்கள்,&'&' என்று பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசினார். தினமலர் நாளிதழ் நடத்திய, பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான "ஜெயித்துக் காட்டுவோம்&' நிகழ்ச்சியில், பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசியதாவது:
வாழ்க்கைக்கு பத்தாம் வகுப்பு ஒரு திறவுகோல் மாதிரி. கவனமாக படித்து தேர்வில் நிறைய மதிப்பெண் எடுத்து வெற்றிபெற வேண்டும். "எனது வெற்றிக்காக இந்தத் தேர்வை எழுதுகிறேன், தேர்வை நன்றாக எழுதுவேன்&' என்று அழுத்தமாக நினையுங்கள். இந்த நினைப்பே நீங்கள் கவனமாக படிக்க உந்துதலை எற்படுத்தும். உலகம் சுலபமான வாய்ப்புகளை தந்துவிடாது. தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்ற அளவிற்கு மதிப்பெண்கள் பெறுவதைவிட, அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினையுங்கள்.
நினைத்த இலக்குகளை அடைய ஆசைகளை பலி கொடுங்கள். தேர்வு நாள் நெருங்கும் போது, "டிவி&' பார்ப்பதை, வீணாக நேரத்தை செலவிடுவதை, பொழுது போக்குகளால் கவனத்தை சிதற விடுவதை தவிருங்கள்.
படிப்பை தவமாக நினைத்து முழு ஈடுபாட்டோடு படியுங்கள். முழு ஈடுபாட்டோடு தவம் செய்தால் தான் வரம் கிடைக்கும்.
ஒழுங்காக படிக்கவில்லை என்று ஆசிரியர்கள் திட்டுகிறார்களே என்று வருத்தப்படாதீர்கள்.
நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்து தான் உங்களை கோபித்துக் கொள்கின்றனர். அதே ஆசிரியர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்ளுங்கள். நன்றாக படியுங்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் போது ஆசிரியர்கள் சந்தோஷப்படுவார்கள். பாராட்டுவார்கள். இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.
