அடுத்த ஆண்டில் பஞ்சாபில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
அடுத்த ஆண்டில் பஞ்சாபில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
UPDATED : டிச 01, 2009 12:00 AM
ADDED : டிச 01, 2009 03:35 PM
அ நிறம் | அளவு
சண்டிகர்: அடுத்த ஒரு ஆண்டில் 11 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
‘கடந்த ஆட்சியின் 5 ஆண்டுகளில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. இதனால், பஞ்சாப் மாநிலத்திற்குட்பட்ட 14 ஆயிரம் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்நிலையில் கடந்தாண்டு 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். வரும் ஆண்டில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று பஞ்சாப் முதல்வர் சுக்பிர் சிங் படால் தெரிவித்தார்.
புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு பிறகு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்கள் பணி உயர்வு மூலம் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
