UPDATED : டிச 02, 2009 12:00 AM
ADDED : டிச 02, 2009 11:11 AM
அ நிறம் | அளவு
கோவை மத்திய சிறையில் 62 ஆயுள் தண்டனை கைதிகள், நேற்று (டிச. 1ம் தேதி) எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் பலர் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து வருகின்றனர். கைதிகளின் கல்வி வசதிக்காக சிறையில் கல்விக் கூடம் செயல்படுகிறது. நேற்று, இக்கல்விக் கூடத்தில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது.
சிறையில் உள்ள 49 ஆயுள் கைதிகளும், திருச்சியை சேர்ந்த ஐந்து கைதிகளும், மதுரையைச் சேர்ந்த ஒன்பது கைதிகளும் தேர்வு எழுதினர். சிறைத்துறை டி.ஜ.ஜி., கோவிந்தராஜன் மேற்பார்வையில், ஜெயிலர் அன்பழகன் மற்றும் மாவட்ட கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் தேர்வு கண்காணிப்பாளர்களாக செயல்பட்டனர்.
