அரசியல் தலைமை பண்பு குறித்த பெண்களுக்கான ஆன்லைன் படிப்பு
அரசியல் தலைமை பண்பு குறித்த பெண்களுக்கான ஆன்லைன் படிப்பு
UPDATED : டிச 03, 2009 12:00 AM
ADDED : டிச 03, 2009 05:35 PM
புதுடில்லி: அரசியல் தலைமைப் பண்பு குறித்து பெண்களுக்கான ஆன்லைன் படிப்பு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் ஐக்கிய நாடுகளுக்கான ஐனநாயக நிதி, சமூக ஆராய்ச்சி மையம், டபிள்யு.பி.சி., ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திட்டத்தில் இப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களுக்கான வாய்ப்புகள், வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ள பெண்களை மையமாக வைத்து இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும், “சுய இலக்கை அடைய ஊக்குவிக்கும் வகையிலான அடிப்படை தகவல்களை அளிக்கும் வகையில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. தங்களது தலைமைப் பண்பு மற்றும் அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்கள் இதில் சேரலாம். இப்படிப்பின் மூலம் அரசியல் கோணங்களின் அடித்தளத்தை அறிந்துகொள்ளவும் முடியும்” என்று சமூக ஆராய்ச்சி மைய இயக்குனர் ரஞ்சனா குமாரி தெரிவித்தார்.
‘அரசியலில் பெண் தலைவர்கள் அதிகளவில் உருவாக இந்த படிப்பு உதவும்’ என்று டபிள்யு.பி.சி. செயல் இயக்குனர் ஹம்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
