தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஆக்சிஜனை டின்களில் வாங்கும் நிலை வரும்’

‘ஆக்சிஜனை டின்களில் வாங்கும் நிலை வரும்’

‘ஆக்சிஜனை டின்களில் வாங்கும் நிலை வரும்’


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனை வருங்காலத்தில் டின்களில் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்று அமைச்சர் ஷாஜகான் பேசினார்.


நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் நேற்று நடந்த பள்ளி வளாகத்தை பசுமையாக்கும் திட்ட துவக்க விழாவில் அவர் பேசியதாவது: ஈஷா யோகா மையம் பசுமை கரங்கள் திட்டம் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 120 பள்ளிகளுக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இப்போது வந்துள்ள 2012 என்ற ஆங்கில திரைப்படத்தில் உலகம் அழிவதை காட்டியுள்ளனர். இதற்கு காரணம் பூமி வெப்பமடைவதால் தான் என்றும் அதில் கூறியுள்ளனர். தற்போது உண்மையிலேயே பூமி வெப்பமடைந்துள்ளதால் தான் பருவ மழை தவறுதல், நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் எல்லாம் ஏற்பட்டு வருகிறது.


தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய காற்றும் மாசுபடுகிறது. ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளதால் அதன் மூலம் தோல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமானால் மரங்களால் தான் முடியும். மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜன் வருங்காலத்தில் டின்கள் மூலம் பிடிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தற்போது ஜப்பான், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் காற்று மாசுபட்டுள்ளதால் பத்து டாலர் பணம் கொடுத்து டின் மூலம் தான் ஆக்சிஜனை சுவாசித்து வருகின்றனர். மாணவர்கள் ஒரு ஆண்டு மரத்தை பராமரித்து வளர்த்தால் அந்த மரம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நிழல் மற்றும் தூய்மையான காற்றை அளிக்கும். இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us