UPDATED : டிச 04, 2009 12:00 AM
ADDED : டிச 04, 2009 05:17 PM
இந்தாண்டு முதல் ஆன்லைன் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேட் தேர்வு தொடர்ந்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. தொழில் நுட்ப கோளாறு, சிறிது காலம் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு போன்றவற்றை தொடர்ந்து தற்போது கடந்தாண்டு கேள்விகள் இந்தாண்டும் கேட்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது இத்தேர்வு சந்திக்கும் அடுத்த பிரச்னை.
“குறிப்பாக கேள்வி-பதில் பகுதியில் இடம்பெற்றுள்ள 20 வினாக்களில் 5-6 வினாக்கள் கடந்த ஆண்டே கேட்கப்பட்டுள்ளன. எனவே, இந்தாண்டு மூன்றாம் நாள் முதல் கேட் தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கு இது சாதகமாக அமையும். இதனால், சில மாணவர்களின் ‘வெயிட்டேஜ்’ அதிகரிக்கலாம்” என கேட் தேர்விற்கான பிரபல பயிற்சி மையத்தின் துணை தலைவர் கவுதம் பூரி தெரிவித்துள்ளார்.
இத்தேர்வை முதல்நாளிலேயே எழுதியதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
