தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலையில் அணுக்கரு தகவல் மையம்

பாரதியார் பல்கலையில் அணுக்கரு தகவல் மையம்

பாரதியார் பல்கலையில் அணுக்கரு தகவல் மையம்


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 02:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 02:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: இந்தியாவில் அமையவுள்ள தேசிய அணுக்கரு தகவல் மையத்தின் ஒரு அங்கமாக பாரதியார் பல்கலையில் இயற்பியல் துறை அணுக்கரு ஆய்வுக்கூடம் துவங்கப்பட்டுள்ளது. இதன் ஆராய்ச்சிப் பணிகளுக்கு, இந்திய அணுசக்தி துறை 11 லட்சம் ரூபாய் உதவி வழங்கியுள்ளது.


இது பற்றி பல்கலையின் இயற்பியல் துறைத் தலைவர் குழந்தைவேலு கூறியதாவது:
இந்தியாவின் அணுக்கரு உலைகளுக்குத் தேவையான  அணுக்கரு தகவல்களை திரட்டும் ஆராய்ச்சித் திட்டம், கோவை பாரதியார் பல்கலையில் நடந்து வருகிறது. இந்த பணிகள் பல்கலையின் இயற்பியல் துறை துணைப் பேராசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப் பணிகளுக்காக, மும்பையில் உள்ள அணுசக்தி துறை 11 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.


இந்த ஆராய்ச்சித் திட்டத்தில், அணுக்கரு பிளவு தகவல்கள், மாறுபட்ட முறையில் நிகழும் அணுக்கரு வினைகள் ஆகியவை ஆராயப்படும். குறிப்பாக, அணுக்கருப் பிளவின் போது அணுக்கரு இரண்டாக பிளவுபட்டு வினை நடைபெறும். மிகவும் அரிய நிகழ்வாக, அணுக்கரு மூன்றாக பிளவுபடும். இது போன்ற வினைகளின்போது வெளிப்படும் சக்தி, வெளிப்படும் துகள்கள், குறுக்கு வெட்டு தோற்றம் ஆகியவை, வெவ்வேறு காரணிகளால் எவ்வாறு வேறுபடுகிறது என்பதற்கான தகவல்களை பெறுவது, இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் முக்கியம் நோக்கம்.


இந்தியாவில் அமையவுள்ள தேசிய அணுக்கரு தகவல் மையத்தின் ஒரு அங்கமாக, பாரதியார் பல்கலையின் இயற்பியல் துறை அணுக்கரு ஆய்வுக்கூடம் செயல்படும். இவ்வாறு, குழந்தைவேலு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us