தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைத்தறி துணிகளை ஆதரித்து கல்லூரி மாணவர்கள் பேரணி

கைத்தறி துணிகளை ஆதரித்து கல்லூரி மாணவர்கள் பேரணி

கைத்தறி துணிகளை ஆதரித்து கல்லூரி மாணவர்கள் பேரணி


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கைத்தறித் துணிகளை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தி மாணவ, மாணவியர் இன்று (டிச. 7ம் தேதி) விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.


பாப்பநாயக்கன்பாளையம் அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகே துவங்கிய பேரணியை, கோவை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை உதவி இயக்குனர் விஜயகுமார் துவக்கி வைத்தார். கதிர் கல்லூரியும் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தின. கதிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கதிர் தலைமை தாங்கினார்.


இதுபற்றி கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், “தொழில் புரட்சியின் ஒரு பகுதியாக நாட்டில் நூற்பாலைகள் பெருகி விட்டன. இதனால் கிராமிய கைத்தொழிலான கதர், கைத்தறித் துணிகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. கிராம நெசவாளர் குடும்பங்கள் வளம் பெறவும், பாரம்பரிய கைத்தொழிலை காக்கவும் அனைவரும் கைத்தறித் துணிகளை பயன்படுத்த முன்வர வேண்டும்.


இது குறித்து கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்பேரணி நடத்தப்படுகிறது,” என்றனர். வ.உசி. மைதானத்தில் நிறைவு பெற்ற இப்பேரணியில், கதிர் கல்வி நிறுவன மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us