தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு


UPDATED : டிச 08, 2009 12:00 AM

ADDED : டிச 08, 2009 06:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2009 12:00 AM ADDED : டிச 08, 2009 06:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் பணி காலியிடங்களை, நிரப்புவது தொடர்பான பதிவு மூப்பு பட்டியல், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இணையதளத்தில் பெயர் பட்டியலை காணலாம்.


பதிவு மூப்பு பட்டியல், கோவை மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை, டிச., 9 முதல் www.cbe.tn.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். தங்கள் பெயர் விடுபட்டுள்ளவர்கள் மட்டும் கீழே குறிப்பிட்ட தேதிகளில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனரை நேரில் சந்திக்க வேண்டும்.


பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதியுள்ள அனைத்து மனுதாரர்களும் ஒதுக்கப்பட்டுள்ள தேதியில் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் பங்கேற்று, தாங்கள் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 2009 டிச., 8ல் ஆங்கில பாடப் பிரிவினரும், டிச., 9ல் தமிழ், டிச., 10,11 தேதிகளில் கணிதம், டிச., 14ல் வரலாறு மற்றும் புவியியல், டிச., 15ல் இயற்பியல், டிச., 16, 17ல் வேதியியல், டிச., 18ல் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவினரும் பங்கேற்க வேண்டும்.


குறிப்பிட்ட தேதியில் அந்தந்த பாடப் பிரிவினருக்கு மட்டுமே சரிபார்த்தல் பணி நடைபெறும். உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட மனுதாரர்கள் தங்கள் பரிந்துரை தொடர்பாக திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us