மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 36 பேருக்கு வேலை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 36 பேருக்கு வேலை
UPDATED : டிச 14, 2009 12:00 AM
ADDED : டிச 14, 2009 02:46 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 36 பேருக்கு வேலை நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில், ஐ.சி.ஐ.சி.ஐ., ஜே.எப். சர்வீஸ் உள்ளிட்ட 25 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நேர்முகத் தேர்வில் 650 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முன் அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டு வேலை நியமன உத்தரவு வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் ராஜலட்சுமி செய்திருந்தார்.
