தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ. சேர்க்கைக்கு கல்வித்தகுதி தளர்வு: இக்னோ

எம்.பி.ஏ. சேர்க்கைக்கு கல்வித்தகுதி தளர்வு: இக்னோ

எம்.பி.ஏ. சேர்க்கைக்கு கல்வித்தகுதி தளர்வு: இக்னோ


UPDATED : டிச 14, 2009 12:00 AM

ADDED : டிச 14, 2009 06:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2009 12:00 AM ADDED : டிச 14, 2009 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இப்படிப்புகளுக்கு ‘ஓப்பன்மேட்’ என்னும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கிறது. இதற்கு கல்வித் தகுதியாக பல்கலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள பொது பிரிவினரும், 45 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள இதர இடஒதுக்கீட்டு பிரிவினரும் அல்லது ஏதேனும் பல்கலை பட்டத்துடன் கூடிய 3 ஆண்டு பணி அனுபவமும் இருந்தால் போதுமானது.


மேலும் பட்டப்படிப்புடன் கூடிய தேசிய அளவிலான மேலாண்மை படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான மேட், கேட் மற்றும் மாநில அளவிலான தேர்வில் தகுதி பெற்றவர்கள் இக்னேவில் நுழைவுத் தேர்வு எழுதாமல் நேரடி சேர்க்கை பெறலாம்.  பிப். 7ம் தேதி ஓப்பன் மேட் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜன.15ம் தேதி கடைசி நாள். இதற்கான மையங்கள் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவையில் அமைய உள்ளது.


இதற்கான விண்ணப்ப படிவத்தை இக்னோவின் மண்டல மையங்கள், படிப்பு மையங்களில் 500 ரூபாய் செலுத்தி பெறலாம். அல்லது இக்னோவின் இணைய தளத்தில் (www.ignou.ac.in) இருந்தும் டவுண்லோடு செய்து, 550 ரூபாய் ‘டிமாண்ட் டிராப்’ உடன் டில்லியில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.


இதுதொடர்பான விபரங்களை மதுரை பசுமலை சி.எஸ்.ஐ. கல்வி வளாகத்தில் உள்ள இக்னோ மண்டல மையத்தில் நேரிலோ அல்லது 0452- 2380387, 238 0733 என்ற எண்களில் தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us