தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பெண்கள் தங்கள் பலத்தை உணர்ந்தால் மாற்றம் கொண்டு வரலாம்’

‘பெண்கள் தங்கள் பலத்தை உணர்ந்தால் மாற்றம் கொண்டு வரலாம்’

‘பெண்கள் தங்கள் பலத்தை உணர்ந்தால் மாற்றம் கொண்டு வரலாம்’


UPDATED : டிச 17, 2009 12:00 AM

ADDED : டிச 17, 2009 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2009 12:00 AM ADDED : டிச 17, 2009 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “பெண்கள் தங்கள் பலத்தை புரிந்து கொண்டால், ஒட்டுமொத்த அமைப்பையே மாற்ற முடியும்,” என்று பல்கலை மானியக்குழு உறுப்பினர் கருணா கூறினார்.


‘உயர் கல்வியில் பெண்களின் திறன் வளர்த்தல்’ பற்றிய ஐந்து நாள் கருத்தரங்கம் பல்கலையில் துவங்கியது. பல்கலைக்கழக மானியக்குழுவுடன் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கை, போலீஸ் துணை கமிஷனர் காமினி துவக்கி வைத்தார்.


அவர் பேசுகையில், “இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, பெண்ணும் ஆணும் சரி சமம். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால் நிஜத்தில் பெண்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். 26 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு பெண் கடத்தப்படுகிறாள். 29 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். ஒவ்வொரு நாளும் 16 புதுமணப் பெண்கள் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்படுகின்றனர்.


இரு நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன. பெண்களுக்கு ஆதரவான சில சட்டங்கள் மூலம், இன்று பெண்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை, 13 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. பல்கலை துணைவேந்தர்களாக மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர். பெண்களால் எதுவும் முடியும் என ஒவ்வொரு பெண்ணும் நிரூபிக்க வேண்டும். சமுதாயத்தை நாம் புரிந்து கொண்டால் நம்மால் அதை மாற்ற முடியும்,” என்றார்.


அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர் சண்முகானந்தம் பேசுகையில், “இந்திய மக்கள் தொகையில் பாதி இருந்தாலும், முடிவு எடுக்கும் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் குறைந்த அளவே உள்ளனர். கல்வித்துறையும் விதிவிலக்கு இல்லை. கல்வி நிறுவனங்களில் சேரும் பெண்களின் சதவீதம் உயர்ந்து வந்தாலும் முக்கிய பொறுப்புகளை அடைவது சிரமமாக இருந்த நிலைமை இன்று மாறி வருகிறது. இது போன்ற கருத்தரங்குகள் பெண்கள் உயர்ந்த நிலைக்கு உயர வழிவகுக்கும்,” என்றார்.


பல்கலை மானியக்குழு உறுப்பினர் கருணா பேசுகையில், “உயர் கல்வியில் பெண்களின் பங்களிப்பு பற்றிய இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு, 2002 முதல் நாட்டின் பல்வேறு பல்கலைகள், கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. துணைவேந்தர்கள், பதிவாளர்கள், நிதி அலுவலர்கள் பதவி வகிக்கும் பெண்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கருத்தரங்குகளில் பங்கேற்கும் திறமையான பெண்கள் பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி அளிக்க அனுப்பப்படுவர்.


இதுவரை நடந்த 79 கருத்தரங்குகளில் 2,000 ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பல்கலை மானியக்குழு மட்டத்தில் இந்த பயிற்சித் திட்டத்தை கண்காணிக்க தேசிய அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் பலத்தை புரிந்து கொண்டால் ஒட்டுமொத்த அமைப்பையே மாற்ற முடியும். கல்வி கற்பதில் இருந்து அந்த மாற்றம் துவங்க வேண்டும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us