தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நானோ, பயோ டெக்னாலஜியால் உணவு உற்பத்தியை பெருக்கலாம்

நானோ, பயோ டெக்னாலஜியால் உணவு உற்பத்தியை பெருக்கலாம்

நானோ, பயோ டெக்னாலஜியால் உணவு உற்பத்தியை பெருக்கலாம்


UPDATED : டிச 24, 2009 12:00 AM

ADDED : டிச 24, 2009 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2009 12:00 AM ADDED : டிச 24, 2009 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “உலக வெப்பமய பிரச்னையால் நாட்டின் உணவு உற்பத்தி சந்தித்து வரும் பிரச்னைக்கு, நானோ டெக்னாலஜி மற்றும் பயோ டெக்னாலஜி தொழில் நுட்பங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டும்,” என்று பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.


‘மெட்ராஸ் அக்ரிகல்ச்சுரல் ஸ்டூண்ட்ஸ் யூனியன்’(மாசு) கூட்டமைப்பு நாள், கோவை வேளாண் பல்கலையில் நடந்தது. விழாவில் வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி பேசுகையில், “1911ல் துவக்கப்பட்ட ‘மாசு’ கூட்டமைப்பு, இந்தியாவில் உள்ள பழமையான கூட்டமைப்புகளில் முக்கியமானது.  இந்த கூட்டமைப்பு துவங்கிய புதிதில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இன்று குறைந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதிக மாணவர்கள் பங்கேற்று, வேளாண் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ‘மாசு’ மூலம் வெளியிடப்படும் தரமான பத்திரிகையை, சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.


பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது:
கோவை வேளாண் பல்கலை உருவாக்கிய பல வேளாண் தொழில் நுட்ப வல்லுனர்கள் நாட்டின் பசுமைப் புரட்சிக்கு சிறந்த பங்களிப்பு அளித்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு உணவிடும் சவால் ஆன பணி பாராட்டுக்குரியது. உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் உலகில் உள்ள மொத்த வளங்களில் ஐந்து சதவீத வளங்கள் மட்டுமே இங்குள்ளன. மொத்த நிலப்பரப்பளவில் மூன்று சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. இருந்தபோதும்,  அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு வேளாண் விஞ்ஞானிகளுக்கு உள்ளது.


இந்தியாவில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, மீன் உள்ளிட்ட முக்கிய உணவு பொருட்களின் உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் தனிமனித பயன்பாடும் உயர்ந்து வருகிறது. இதனால் 1951 முதல் 2008 வரையிலான காலகட்டங்களில நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வேளாண் பொருட்களின் பங்கும், வேலை வாய்ப்புகளும் குறைந்து விட்டன.


தண்ணீர், நிலம் போன்ற இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. காடுகள் அழிப்பு, மண்ணரிப்பு ஆகியவையும் கார்பன் சுழற்சியை பாதிக்கின்றன. நகர்மயமாக்கல் அதிகரித்து வருவதால் சாகுபடி நிலங்கள் குறுகி வருகின்றன.  விளைப் பொருட்களுக்கும் நல்ல விலை கிடைப்பதில்லை. விவசாய கூலியாட்கள் தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்று விடுகின்றனர்.


உலக வெப்பமயமாதலால் குறுகிய கால இடைவெளிகளில் பெய்யும் திடீர் கனமழை அல்லது வறட்சி ஆகியவை மண்ணின் வளத்தை கெடுக்கிறது. பயிர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வேளாண் தொழிலில் நேரடியாக ஈடுபடுவோர் குறைந்து வருகின்றனர். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் மக்கள் தொகையும் பெருகுவதால், அதற்கேற்ப உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டியுள்ளது.


இப்பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய பெரிய பொறுப்பு வேளாண் விஞ்ஞானிகளுக்கு உள்ளது. நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி ஆகிய தொழில் நுட்பங்களின் உதவியுடன் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். இவ்வாறு, துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.


‘மாசு’ விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வேளாண் பல்கலை பதிவாளர் சுப்பையன், ‘மாசு’ செயலாளர் சிவக்குமார் உட்பட வேளாண் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us