தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாந்தோம் பள்ளிக்கு ரூ.1.60 கோடியில் கட்டடம்

சாந்தோம் பள்ளிக்கு ரூ.1.60 கோடியில் கட்டடம்

சாந்தோம் பள்ளிக்கு ரூ.1.60 கோடியில் கட்டடம்


UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM

ADDED : ஜூன் 17, 2023 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM ADDED : ஜூன் 17, 2023 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி பள்ளிகளை புனரமைத்து, சர்வதேச அளவில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, பழைய பள்ளி கட்டடங்களை இடித்து அகற்றி, புதிதாக கட்டும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாந்தோம் பகுதி, நான்காவது டிரஸ்ட் லிங்க் சாலையில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டடம் கட்டி, பல ஆண்டுகள் ஆன நிலையில், இடித்து முழுமையாக அகற்றி, புதிதாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதைத்தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன், இந்த பழைய பள்ளி கட்டடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. சமீபத்தில் அதே இடத்தில், புதிதாக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு 1.60 கோடி ரூபாய். தற்போது இந்த பள்ளி கட்டடத்திற்கான கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது. பள்ளியின் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்டவற்றை நவீன முறையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில், இந்த பள்ளி கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us