தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் இன்று 2 இடங்களில் தினமலர் - வழிகாட்டி

சென்னையில் இன்று 2 இடங்களில் தினமலர் - வழிகாட்டி

சென்னையில் இன்று 2 இடங்களில் தினமலர் - வழிகாட்டி


UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM

ADDED : ஜூன் 17, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM ADDED : ஜூன் 17, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்கு தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்று விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய வழிகாட்டும் வகையில், தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் இன்று இரண்டு இடங்களில் நடக்கிறது.தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரையிலும்; தாம்பரம் டி.ஜி.பி., கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து, தினமலர் நாளிதழ் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன், வேலைவாய்ப்பு மிகுந்த பாடப்பிரிவுகள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்.ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முறை, சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், கட் -ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை பட்டியலின்படி விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வது அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் மிகுந்த பாடப்பிரிவுகள் ஆகியவை குறித்து, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும், பெற்றோரும் இலவசமாக பங்கேற்கலாம். www.kalvimalar.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் விபரங்களை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us