தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவியை சேர்க்க மறுப்பு : தந்தை புகார்

மாணவியை சேர்க்க மறுப்பு : தந்தை புகார்

மாணவியை சேர்க்க மறுப்பு : தந்தை புகார்


UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM

ADDED : ஜூன் 17, 2023 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM ADDED : ஜூன் 17, 2023 09:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி போஸ்ட் ஆபீஸ் வீதியில் வசித்து வருபவர் பிச்சைமணி, 48. இவரது மூத்த மகள் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் மற்றொரு பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த நான்கு மாதமாக பிச்சைமணிக்கு உடல்நிலை சரியில்லாததால், மூத்த மகள் படிக்கும் அரசு பள்ளியிலேயே இரண்டாவது மகளையும் சேர்க்க முடிவு செய்து, அரசு பெண்கள் பள்ளிக்கு சென்றார். ஆனால், தலைமை ஆசிரியை, மாணவியை பள்ளியில் சேர்க்க முடியாது என கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் அவிநாசி போலீசில் புகார் அளித்தனர். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடமும் புகார் அளித்தனர்.பிச்சைமணி கூறுகையில், மகளை சேர்க்க முடியாததற்கு, உரிய காரணத்தை சொல்லுங்கள் என தலைமை ஆசிரியை புனிதவதியிடம் கேட்டேன். எங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு, என்று சொன்ன அவர், உனது மகளுக்கு சரியாக வாசிக்க கூட தெரியாது, என பலரின் முன்னிலையில் அவமானப்படுத்தினார். அதன்பின்னரே, போலீசிலும், சி.இ.ஓ.,விடமும் புகார் அளித்தேன் என்றார்.போலீசில் புகார் அளித்த பின், முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், பிச்சைமணியின் இரண்டாவது மகள் நேற்று அரசு பெண்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us