கணினி தேர்வில் தேர்ச்சி பெறாவிடில் ஊதிய உயர்வு கட்
கணினி தேர்வில் தேர்ச்சி பெறாவிடில் ஊதிய உயர்வு கட்
UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 03:50 AM
பொது மக்களுக்கு அரசின் சேவை விரைவில் கிடைக்க வேண்டும். எனவே அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கு இ - நிர்வாகத்துறை முக்கியத்துவம் தந்துள்ளது. இதற்கு கணினி அறிவு அவசியம். ஆனால் பல அதிகாரிகள், ஊழியர்களுக்கு கணினியை கையாள தெரியவில்லை.தேர்ச்சி கட்டாயம்
இதை தீவிரமாக கருதிய இ - நிர்வாகத் துறை அனைத்து துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் கணினி தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கியது. இதன்படி அரசு துறைகள், கார்ப்பரேஷன், வாரியங்களின் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கணினி பயிற்சி பெற வேண்டும். ஏற்கனவே பலமுறை தேர்வு எழுதி, தோல்வியடைந்தோருக்கு, மீண்டும் கணினி தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வு எழுதியும் பலரால் தேர்ச்சி பெற முடியவில்லை. தற்போது இவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு இறுதிக்குள், அதிகாரிகள், ஊழியர்கள் கணினி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இல்லையென்றால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்காது என இ - நிர்வாகத் துறை எச்சரித்துள்ளது.இ - நிர்வாகத்துறை வெளியிட்ட அறிக்கை:
கணினி தேர்வு எழுதாத, எழுதி தேர்ச்சி பெறாத அதிகாரிகள், ஊழியர்கள் https://clt.karnataka.gov.in மற்றும் கார்ப்பரேஷன், ஊழியர்கள் http:mnkclt.clt.karnataka.gov.in இணைய தளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கணினி தேர்வு எழுத வேண்டும். அந்தந்த மாவட்ட தாலுகா அளவிலான அதிகாரிகள் தங்களுக்கு கீழே பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு கணினி தேர்வு எழுதும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நடப்பாண்டு டிசம்பர் 31க்குள் கணினி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால் ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
