தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் பயிற்சி முறைகளை மாற்ற ஆசிரியர்கள் முடிவு

நீட் பயிற்சி முறைகளை மாற்ற ஆசிரியர்கள் முடிவு

நீட் பயிற்சி முறைகளை மாற்ற ஆசிரியர்கள் முடிவு


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 03:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு இந்தாண்டு மே 7ல் நடந்தது. தேர்வு எழுதிய 20.38 லட்சம் பேரில் 11.46 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்வு எழுதிய, 1.44 லட்சம் பேரில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 12,997 அரசு பள்ளி மாணவர்களில், 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களை பயிற்சி மையங்களும், பள்ளிக்கல்வி துறையும் ஆய்வு செய்ததில் பெரும்பாலான மாணவர்கள் உயிரியலில் அதிக மதிப்பெண்ணும், வேதியியலில் சராசரியாகவும் இயற்பியலில் குறைவாகவும் மதிப்பெண் பெற்றது தெரிய வந்துள்ளது. இயற்பியல் மதிப்பெண் குறைவால் நீட் மொத்த மதிப்பெண் அளவு பலருக்கும் குறைந்துள்ளது.இதுகுறித்து நீட் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் கூறியதாவது:
நீட் பயிற்சிக்கு திட்டமிடும் மாணவர்களில் பெரும்பாலானோர் பிளஸ் 2வில் கணிதம் அல்லாத அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து உயிரியல் பாடத்துக்கு முக்கியத்துவம் தருகின்றனர். அதிக மதிப்பெண் பெறுகின்றனர். ஆனால் இயற்பியலில் கணிதத்தின் அடிப்படையில் பல விடைகள் எழுத வேண்டி வரும். கணித பயிற்சி எடுக்காத மாணவர்களுக்கு, இயற்பியலில் 30 சதவீத மதிப்பெண் மட்டுமே பெறுகின்றனர். இதனால் மொத்த மதிப்பெண் குறைந்துள்ளது. எனவே இந்த ஆண்டு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, இயற்பியல் பாடத்தில் கூடுதல் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us