மாணவர்களுக்கு இலவச டியூஷன் ஓய்வுபெற்ற பின்னும் நல்ல மனசு
மாணவர்களுக்கு இலவச டியூஷன் ஓய்வுபெற்ற பின்னும் நல்ல மனசு
UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 07:08 AM
கோலார் மாவட்டம் பேத்தமங்களாவை சேர்ந்தவர் சரோஜம்மா, 70. இவர் கடந்த 1975 ல் அரசு பள்ளி ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். தங்கவயல் தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு கன்னட மூத்த தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். பேத்தமங்களாவில் பத்து ஆண்டுகளும், ஈசண்டரா மிட்டூரில் ஓராண்டும், என்.ஜி.ஹல்கூரில் இரண்டு ஆண்டுகளும் பணிபுரிந்தார். கடந்த 2012 ல் பேத்தமங்களா மாதிரி முதன்மை துவக்க பள்ளியில் ஆசிரியையாக ஓய்வு பெற்றார். ஆனாலும் கல்வியின் மீது கொண்ட காதலால், தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலுள்ள 20 மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடம் கற்பித்து வருகிறார்.பாடப் புத்தகத்தில் இருப்பதை தவிர வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் கற்பிக்கிறார். ராமாயணம், மஹாபாரதத்தின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இத்துடன் டியூஷன் படிக்க வரும் மாணவ, மாணவியருக்கு தனது வீட்டிலேயே உணவு, சிற்றுண்டி தயாரித்து வழங்குகிறார்.இவரின் சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவரிடம் படித்த மாணவர்கள், அரசு ஊழியர்களாகவும், மாவட்ட, மாநில அளவில் அரசியல் தலைவர்களாகவும் மாறிய உதாரணங்கள் உள்ளன. இது குறித்த அவர் கூறுகையில், எனக்கு கிடைத்த கல்வியை நான் கற்பிக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தவரை பல குழந்தைகளுக்கு கற்பிப்பதே எனது நோக்கம், என்றார்.
