தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சிக் குழு ஆய்வு

கல்வி அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சிக் குழு ஆய்வு

கல்வி அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சிக் குழு ஆய்வு


UPDATED : டிச 31, 2009 12:00 AM

ADDED : டிச 31, 2009 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2009 12:00 AM ADDED : டிச 31, 2009 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கல்வி அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்துவது பற்றி தமிழ் வளர்ச்சிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி, எங்கும் தமிழ் என்ற முழக்கம் ஒலிக்கத் துவங்கியுள்ளது. வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் என அரசு  உத்தரவிட்டுள்ளது.


இதன் அடுத்த கட்டமாக, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் எந்தளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆய்வு செய்து வருகிறது. டிச. 30ம் தேதி மாவட்ட கல்வி அலுவலகத்திலும், 31ம் தேதி முதன்மை கல்வி அலு<வலர் அலுவலகத்திலும் தமிழ் வளர்ச்சிக் குழுவின் மாவட்ட உதவி இயக்குனர் தேவதாசு ஆய்வு நடத்தினார்.


கல்வி அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள், கடிதங்கள், சுற்றறிக்கை, அரசு உத்தரவு நகல்களில் தமிழ் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா, அலுவலர்கள் தமிழில் கையெழுத்திடுகின்றனரா போன்ற விஷயங்களை ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us