தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்பை ஐ.ஐ.டி.,க்கு ரூ.315 கோடி நன்கொடை

மும்பை ஐ.ஐ.டி.,க்கு ரூ.315 கோடி நன்கொடை

மும்பை ஐ.ஐ.டி.,க்கு ரூ.315 கோடி நன்கொடை


UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM

ADDED : ஜூன் 21, 2023 05:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM ADDED : ஜூன் 21, 2023 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கு முன்னரும் இவர் இதற்கு 85 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை ஐ.ஐ.டி.,யின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் பிரிவுகளில் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவும் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நன்கொடைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிலேகனியும், பேராசிரியர் சுபாசிஸ் சவுத்ரியும் கையெழுத்திட்டனர்.இக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான நிலேகனி 1973ல் மின் பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பிற்காக சேர்ந்தார். இதனுடனான 50 ஆண்டகால தொடர்பை குறிக்கும் வகையில் புதிய நன்கொடையை வழங்குவதாக நிலேகனி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நிலேகனி வழங்கிய 85 கோடி ரூபாய் நிதி, புதிய விடுதிகள் கட்டுவதற்கும், தகவல் தொழில்நுட்ப பள்ளிக்கான இணை நிதி உதவிக்கும், நாட்டிலேயே முதல் முறையாக பல்கலையில் இன்குபேட்டரை நிறுவுவதற்கும், அதன் வாயிலாக, ஸ்டார்ட் அப் அமைப்பை கணிசமாக உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த கல்வி நிறுவனத்தில், 62 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பட்டம் பெற்றுள்ளனர். மேலும் இங்கு 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us