UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 05:11 AM
அ நிறம் | அளவு
தமிழக பள்ளிக்கல்வி துறை பாடத்திட்டத்தில், பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண் விபரங்கள் மட்டும், இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மற்றவர்களுக்கு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை. மதிப்பெண் மாறியவர்கள் மட்டும், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலையும், மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
