தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாட்டில் ஐரோப்பிய கல்வி

தமிழ்நாட்டில் ஐரோப்பிய கல்வி

தமிழ்நாட்டில் ஐரோப்பிய கல்வி


UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM

ADDED : ஜூன் 21, 2023 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM ADDED : ஜூன் 21, 2023 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இக்குழு ஐரோப்பிய பயணத்தின் போது பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் விவாதித்துள்ளது. இச்சந்திப்பில் மாணவர்கள், பேராசிரியர்களுடன், நலன் சார்ந்த திட்டங்கள், கூட்டுப் பட்டப்படிப்பு, இண்டர்ன்ஷிப் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்தியக் கல்வியை ஐரோப்பியத் தரத்திற்கு இணையாக கொண்டு செல்லும் முயற்சியாக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜி.என்.இ.எஸ்., கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் மஞ்சித் சிங் நய்யார் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சார்ந்த சிறப்பம்சங்களை கட்டி எழுப்பியுள்ளோம். ப்ரெஞ்சு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்ததின் மூலம் மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சி வாய்ப்புகளையும், திறமைகளையும் உலக அளவில் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக இப்பயணம் அமையும். மேலும் இந்த ஐரோப்பிய பயணம், ஐரோப்பா முழுவதும் உள்ள உயர்மட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பிற்காக நாங்கள் எடுத்த முதல் படியாகும், என தெரிவித்தார்.இக்குழுவில் கல்லூரியின் ஆலோசகரும் முன்னாள் முதல்வருமான மர்லின் மொரைஸ், கல்லூரி முதல்வர் ரகுநாதன், ஆலோசனை மற்றும் புற சேவை மையத்தின் தலைவர் சுவாதி பாலிவால் மற்றும் மின் ஆளுமை மையத்தின் தலைவர் கிறிஸ்டி ஜெயக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us