UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 10:38 AM
அ நிறம் | அளவு
தாய்லாந்து, பாங்காக்கில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி மே 29ம் தேதி நடந்தது. 12 நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் ஆன்லைனில் வழியாக பங்கேற்றனர். தமிழக அணியில், திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரி, முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி ஜெயப்ரீத்தா பங்கேற்றார். நடன யோகா போட்டியில் (17 முதல், 25 வயது பிரிவில்) பங்கேற்று முதலிடம் பெற்றார். மாணவியை பள்ளி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
