UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM
ADDED : ஜூன் 22, 2023 04:05 AM
அ நிறம் | அளவு
மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று, SSLC APRIL 2023 RETOTAL RESULTS என்ற வாசகத்தை கிளிக் செய்யவும். அப்போது தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன், அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெறாத மாணவர்களுக்கான விடைத்தாள் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
