UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM
ADDED : ஜூன் 22, 2023 09:47 AM
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் இரண்டாவது தளம் அறை எண்:233ல் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் உருவாக்கப்பட்ட இந்த நுாலகத்தில் வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் தேவையான புத்தகங்களை எடுத்துச்சென்று படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த நுாலகத்தை பயன்படுத்த முடியாமல் மூடிவிட்டனர். அறிவுக்களஞ்சியமான நுாலகத்துக்கு பூட்டு போட்டது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நுாலகத்துக்கு மூடுவிழா என்கிற தலைப்பில் கடந்த 14ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.செய்தி எதிரொலியாக, நுால கத்தை திறக்க கலெக்டர் கிறிஸ்து ராஜ் உத்தரவிட்டார். இதனால் நேற்று முதல் வருவாய்த்துறை நுாலகம் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. அரசு அலுவலர்கள், நுாலகத்தில் அமர்ந்தும், புத்தகங்களை எடுத்துச்சென்றும், ஆர்வமுடன் படிக்க துவங்கியுள்ளனர். எக்காரணத்துக்காகவும் வருவாய்த்துறை நுாலகத்தை மூடக்கூடாது, தன்னார்வலர்கள் உதவியுடன், புதிய புத்தகங்களை வாங்கி நுாலகத்தை விரிவுபடுத்தவேண்டும் என்பது வாசகர்களின் வேண்டுகோள்.
