UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM
ADDED : ஜூன் 22, 2023 11:25 AM
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பிரான்ஸ் நாட்டில் லியான் நகரில் 2024ம் ஆண்டிற்கான உலகளாவிய திறன் போட்டி நடக்கிறது. அதற்கு முன்னோடியாக, டிஎன் ஸ்கில் 2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டி 55 திறன் பிரிவுகளுக்கு நடக்க உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான தகுதி 2022 ஜன., 1க்கு பின் பிறந்தவர்கள் இப்போட்டி யில் பங்கேற்க தகுதியானவர்கள். இன்பர்மேசன் நெட்ஒர்க் கேப்ளிங், மெக்கட்ரானிக்ஸ் போன்ற திறன் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களின் வயது வரம்பு 25 வயதுக்கு மேல் இருக்க கூடாது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்கலை, மருத்துவம், மருத்துவம் சார்ந்த, பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக், பள்ளி, ஐ.டி.ஐ., படித்த, படிக்கும் மாணவ மாணவியர், தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுனர் பயிற்சி முடித்த தொழிற்பழகுனர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தகுதியான தனிநபர்களும், இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். திறன் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள போட்டியாளர்கள், தங்களது விபரங்களை https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலம் வரும் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு உதவி இயக்குனர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மோகனுார் சாலை, கொண்டி செட்டிப்பட்டி, பெரியப்பட்டி, அஞ்சல், நாமக்கல்-637 002 என்ற முகவரியில் நேரிலும், 79041-11101, 94877-45094, 90802-42036 ஆகிய மொபைல் போனிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
