UPDATED : ஜன 01, 2010 12:00 AM
ADDED : ஜன 01, 2010 11:28 AM
அ நிறம் | அளவு
சென்னை: தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 20ம் ஆண்டு மாநாடு, ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை வளாகத்தில், ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
தற்சமயம் உருவெடுத்துள்ள அரசியல் பிரச்னையால் இம்மாநாடு, மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்பாக தகவல் பெற விரும்புவோர், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் பொருளாளர் ஆர்.கலா (0-99443-09611) மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
