தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவியருக்கும் இனி ஜீரோ டிக்கெட்?

பள்ளி மாணவியருக்கும் இனி ஜீரோ டிக்கெட்?

பள்ளி மாணவியருக்கும் இனி ஜீரோ டிக்கெட்?


UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM

ADDED : ஜூன் 23, 2023 04:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM ADDED : ஜூன் 23, 2023 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பள்ளி, கல்லுாரி மாணவியர் இனி புதிய பஸ் பாஸ்கள் வாங்க தங்கள் பள்ளி அட்மிஷன் டிக்கெட் காண்பித்து வாங்க தேவையில்லை. ஜூலை 1ம் தேதி முதல் மாணவியருக்கும் சக்தி திட்டத்தின் ஜீரோ டிக்கெட் வழங்க, நடத்துனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சக்தி என்ற திட்டம் மூலம் அரசு பஸ்களில் மாநிலம் முழுதும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஜீரோ டிக்கெட் வழங்கப்படுகிறது. தினமும் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகப்படியாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவியர் பஸ்சில் இடம் கிடைக்காமல் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிக்கின்றனர். இவர்களும் இலவச பயணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. வழக்கமாக இலவச பஸ் பாஸ் வாங்குவதற்கு மாணவியர் தங்கள் பள்ளியின் அட்மிஷன் கார்டை காண்பித்து வாங்கி வந்தனர். இதில் மாணவியர் தாங்கள் பஸ் ஏறும் இடத்தையும், இறங்கும் இடத்தையும் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பு கல்வியாண்டு 2023 - 24ம் ஆண்டுக்கான பஸ் பாஸ் வாங்கியிருந்தால் அவர்களுக்கு ஜீரோ டிக்கெட் வழங்க வேண்டாம் என்றும், மாற்றுப்பாதை வழியாக சென்றால் அவர்களுக்கு ஜீரோ டிக்கெட் வழங்குமாறும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே வேளையில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், நடப்பாண்டு ஜூன் 30ம் தேதி வரை இந்த பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம். ஜூலை 1 முதல் சேவா சிந்து இணையளத்தில் புதிய பஸ் பாஸ் வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us