தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதனை நிர்வாகியாக எம்.பி.ஏ., அவசியமில்லை

சாதனை நிர்வாகியாக எம்.பி.ஏ., அவசியமில்லை

சாதனை நிர்வாகியாக எம்.பி.ஏ., அவசியமில்லை


UPDATED : ஜன 01, 2010 12:00 AM

ADDED : ஜன 01, 2010 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2010 12:00 AM ADDED : ஜன 01, 2010 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு


உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக (சி.இ.ஓ.,) திறமையுடன் பணியாற்றி வரும் 50 பேரை, அமெரிக்காவில், பிரபல ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ இதழ் தேர்ந்தெடுத்தது. இதன் அடிப்படையில், ஒரு வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டது. எரிசக்தி மற்றும் ஐ.டி., துறைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், ஐ.டி., நிறுவனமான ஆப்பிள் முதல் நம்மூர் ரிலையன்ஸ் அம்பானி வரை அத்தனை பேரும் அடக்கம்.


அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேரில், 36 பேர் பட்டப்படிப்பான எம்.பி.ஏ., படிக்காதவர்கள் தான். நிறுவனங்களை நிறுவியவர்களில் முதல் மூன்றிடங்களில் ‘ஆப்பிள்’ ஐ.டி., நிறுவன உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் யுன் ஜாங் யாங், ‘கஜ்ப்ரோம்’ என்ற ரஷ்ய எரிசக்தி நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சி மில்லர் இருக்கின்றனர். இந்த மூவரும் எம்.பி.ஏ., முடிக்காதவர்கள் தான்.


சிறந்த தலைமை நிர்வாகிகள் ஐந்து பேரில் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஜான் டி சேம்பர்ஸ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி இருவர் மட்டும்தான் தொழில் மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். எரிசக்தித் துறை சார்ந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் ஆறு பேரில் நான்கு பேர் டிகிரி முடிக்காதவர்களே. கூகுளின் எரிக் இ ச்மிட், அமேசான்.காம் நிறுவனத்தின் ஜெப்ரி பி பெஜோ, லெட் ஜிலெட் சய்ன்சஸ் நிறுவனத்தின் மார்ட்டின் ஆகியோரும் தொழில் மேலாண்மையில் பட்டப்படிப்பு ஏதும் படிக்காதவர்கள்தான். ஐம்பது பேரில், 14 பேர் மட்டுமே எம்.பி.ஏ., பட்டப்படிப்பு படித்தவர்கள். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us