தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகத்தர கூடைப்பந்து மைதானம் திறப்பு

உலகத்தர கூடைப்பந்து மைதானம் திறப்பு

உலகத்தர கூடைப்பந்து மைதானம் திறப்பு


UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM

ADDED : ஜூன் 25, 2023 03:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM ADDED : ஜூன் 25, 2023 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
காவல் துறை விளையாட்டு வீரர்களுக்காக உலகத்தர கூடைப்பந்து மைதானத்தை, அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.காவல் துறை விளையாட்டு வீரர்களுக்காக புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உலகத்தர கூடைப்பந்து மைதானத்தை, அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து 25 வகையான தனி மற்றும் குழு விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள போலீசாருக்கு உபகரணங்களை வழங்கினார். தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், பேட்மின்டன், பளு துாக்குதல், மேசை பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இந்த உபகரணங்கள் பயன்படும். பின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிலம்பாட்டம் நடந்தது. ஒரே நேரத்தில் 1,600 மாணவர்களின் சிலம்பம் நிகழ்ச்சியை நடத்தியதற்காக, வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பினர் வழங்கிய உலக சாதனை விருதை அமைச்சர் உதயநிதி, கூடுதல் காவல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us