UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM
ADDED : ஜூன் 25, 2023 10:53 AM
பெங்களூருவில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் அண்டு நியூரோ சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் பல்வேறு துணை மருத்துவ படிப்புகளில், 2023-24ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.எஸ்சி., - அனெஸ்தீஸியா டெக்னாலஜி பி.எஸ்சி., - நர்சிங் பி.எஸ்சி., - ரேடியோகிராபிபி.எஸ்சி., - நியூரோபேதாலஜி டெக்னாலஜி போஸ்ட் பேசிக் டிப்ளமா - சைக்யாட்ரிக் / மெண்டல் ஹெல்த் நர்சிங், நியூரோசயின்ஸ் நர்ஸிங்சான்றிதழ் படிப்பு - நியூரோபேதாலஜி டெக்னாலஜி
சேர்க்கை முறை:
பிரத்யேகமாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 7
விபரங்களுக்கு:
www.nimhans.ac.in
