UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM
ADDED : ஜூன் 25, 2023 12:41 PM
தேசிய கல்விக் கொள்கை 2020ன் சவால்களும், முறைகளும் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு குருநானக் கல்லூரியில் நடந்தது. கவர்னர் ரவி அமர்வில் கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ராஜிவ் காந்தி பல்கலைகழகத்தின் துணைவேந்தர் சாகேத் குஷ்வாஹா, புதிய கல்வி கொள்கையின் முக்கியத்துவத்தையும், நடைமுறைப்படுத்துதலையும் குறித்து விளக்கினார். கர்நாடக மாநில உயர்கல்வித்துறை துணைத் தலைவர் சித்தேகவுடா, அம்மாநிலத்தில் புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.ராஜிவ் காந்தி பல்கலை மற்றும் குருநானக் கல்லூரிக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பயிற்சிமுறை, ஆராய்ச்சி, ஆசிரியர்-மாணாவர்களுக்கான கலாச்சார மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை உள்ளடக்கிய ஒப்பந்தமாகும்.நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
புதிய கல்வி கொள்கை என்பது தற்சமயம் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும். இந்த கல்வி கொள்கை மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும் புரட்சிகரமான கொள்கையாகும். இது மாணவர்கள் தங்களை சர்வதேச அளவில் தயார்படுத்திக்கொள்ள உதவும். நாடு முழுதும் இப்புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தும் பொழுதுதான் புதிய மற்றும் இளமையான இந்தியாவை கட்டமைக்க முடியும்.இவ்வாறு பேசினார்.கல்லூரி முதல்வர் ரகுநாதன் வரவேற்புரை ஆற்றினார். மூன்று அமர்வுகளாக கொண்ட இந்த நிகழ்ச்சியில் முனைவர் சோனி குரியகொஸ், நிர்மலா கல்லூரி, முனைவர் ஜெரினபி, அவினாசிலிங்கம் பல்கலை., மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக கருத்தரங்கின் சாராம்சத்தை குருநானக் கல்லூரியின் ஐ.க்யூ.ஏ.சின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஸ்வாதி பாலிவால் சமர்ப்பித்தார்.
