UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM
ADDED : ஜூன் 25, 2023 01:07 PM
அ நிறம் | அளவு
சென்னை:
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம், சென்னை அறநிலையத் துறை தலைமையகத்தில், அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நேற்று மாலை நடந்தது.இதில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில், நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், வேத ஆகம, பிரபந்த விண்ணப்ப பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் பயிற்சிப் பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
