UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM
ADDED : ஜூன் 26, 2023 02:14 AM
தர்மபுரி:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கான, தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ., குணசேகரின் அறிவுறுத்தலின்படி, தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு, தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடந்த இப்பயிற்சியில், தர்மபுரி ஒன்றியத்திலுள்ள 13 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 148 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்களின் உடல்நலம், நலவாழ்வு, மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி நடந்தது.
