தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் விண்ணப்பம் விநியோகம்: சென்டாக்

நீட் விண்ணப்பம் விநியோகம்: சென்டாக்

நீட் விண்ணப்பம் விநியோகம்: சென்டாக்


UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM

ADDED : ஜூன் 26, 2023 02:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2023 12:00 AM ADDED : ஜூன் 26, 2023 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
நீட் தேர்ச்சி பட்டியல் வெளியாகியுள்ள சூழ்நிலையில் எம்.பி.பி., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடவடிக்கையை சென்டாக் துவக்கியுள்ளது. தகவல் குறிப்பேட்டிற்கு அனுமதி கிடைத்ததும், அடுத்தவாரத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து யூ.ஜி., நீட் தேர்வு எழுதிய 5,714 மாணவர்களில், 3140 பேர் இந்தாண்டு தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.9. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதமான 52.79யை விட 2.11 விழுக்காடு அதிகம். அசோக்குமார் என்ற மாணவர் 700 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 287 வது இடத்தையும்,புதுச்சேரியில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். நீட் தேர்ச்சி பட்டியல் வெளியாகியுள்ள சூழ்நிலையில் எம்.பி.பி., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடவடிக்கையை சென்டாக் துவக்கியுள்ளது. இருப்பினும், சென்டாக் நீட் படிப்புகளுக்கான தகவல் குறிப்பேடு,மாநில தழுவிய நீட் தேர்ச்சி பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.இதேபோல் எம்.பி.பி.எஸ்.,அரசு ஒதுக்கீட்டு இடங்களும் இன்னும் செய்யாமல் ஜவ்வாக இழுத்துக்கொண்டுள்ளது. மாநில தழுவிய நீட் தேர்ச்சி பட்டியலை பொருத்தவரை சுகாதாரத் துறை தான் வெளியிட வேண்டும். ஆனால் நீட் தேர்ச்சி பட்டியல் இன்னும் சுகாதார துறையின் கைக்கு கிடைக்கவில்லை.சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, நீட் தேர்ச்சி பட்டியல் நேரடியாக மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்காது. மத்திய அரசு குறிப்பிடும் தேதியில் டில்லிக்கு சென்று ஹார்டு டிஸ்க்கில் பட்டியல் பெற வேண்டும். இதற்காக நேரில் சுகாதார துறை அதிகாரி செல்ல வேண்டும். அந்த ஹார்டு டிஸ்கினை புதுச்சேரிக்கு கொண்டு வந்ததும்,சுகாதார துறை இயக்குநருக்கு அதற்கான பாஸ்வேர்டு வரும். அதன் பிறகு பாஸ்வேர்டினை கொண்டு உள்ளே நுழைந்து, நீட் தேர்ச்சி பட்டியலை பகுத்தாய்வு செய்ய வேண்டும்.பின், அந்த பட்டியலை சென்டாக், ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் ,பெற்றோர் பார்வைக்கு வெளியிட வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு நீட் பட்டியலை பெற இன்னும் அழைப்பு வரவில்லை. இதன் காரணமாக மாநில நீட் தேர்ச்சி பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. வரும் 26ம் தேதி நீட் தேர்ச்சி பட்டியல் தொடர்பாக அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு ஒரிரு தினங்களில் நீட் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என்றனர். இருப்பினும், எம்.பி.பி.எஸ்.,உள்ளிட் நீட் மதிப்பெண் படிப்புகளுக்கு அடுத்தவாரத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சென்டாக் அதிகாரிகள் கூறும்போது, கடந்தாண்டு தகவல் குறிப்பேடு இறுதி செய்ய காலதாமதம் ஆனதால், மாணவர் சேர்க்கையும் தள்ளி போனது.இந்த முறை முன் கூட்டியே தகவல் குறிப்பேடு இறுதி செய்யப்பட்டு, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.  தகவல் குறிப்பேடு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தகவல் குறிப்பேட்டிற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்பதால் அடுத்தவாரத்தில் நீட் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே மாணவர்களின் நீட் மதிப்பெண் பட்டியல் உள்ள நிலையில், விண்ணப்பிப்பதில் எந்த சிக்கல் இருக்காது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us