தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் கூடுதல் இடம் நிரப்பப்படும்: கலெக்டர்

கல்லூரிகளில் கூடுதல் இடம் நிரப்பப்படும்: கலெக்டர்

கல்லூரிகளில் கூடுதல் இடம் நிரப்பப்படும்: கலெக்டர்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
மாணவர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்வதற்கு மேல்நிலைக்கல்வியோடு நின்றுவிடாமல் தொடர்ந்து உயர்கல்வியை கட்டாயம் கற்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி கலையரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லுாரி சேரும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லுாரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற கல்லுாரிகளில் அதிகமான இடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து தகுந்த வழிகாட்டுதலோடு கல்வி கற்க வேண்டும். சுய தொழில் செய்திடவும் அடிப்படையாக ஒரு பட்டப்படிப்பு வேண்டும். மேலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படித்தால் வருங்காலத்தில் சிறந்து விளங்க முடியும். நம் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயம் சார்ந்த படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.எதிர்காலம் சிறப்பாக அமையும் கல்விதுறையை சிறந்த வழிகாட்டுதலுடன் தேர்வு செய்து படிக்கவேண்டும். மாணவர்கள் திறன்களை வளர்த்து கொள்ளவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிகொள்வதற்கும் மேல்நிலைக்கல்வியோடு நின்றுவிடாமல் தொடர்ந்து உயர்கல்வியை கட்டாயம் கற்க வேண்டும். மேலும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உயர்கல்வி முக்கியம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 87 சதவிதமும், மாணவிகள் 94 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் 84 சதவிதமும், மாணவிகள் 92 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு விடுதி, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.இதில் மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் சிவநடராஜன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா, சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா, மாணவ மாணவியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us